Thursday, October 20, 2011

அம்மாவிடம் போய் சொல்லுங்கள்


ஒரு பூங்காவில் தற்செயலாக மேரி என்ற ஒரு சிறுமியைச் சந்தித்தார் டால்ஸ்டாய். அவள் அவரை பந்து விளையாட அழைத்தாள். சற்று நேரம் மகிழ்ச்சியாகப் பந்து விளையாடினார் அவர். அந்த சிறுமி விளையாடி முடித்துவிட்டு, 'போய்வருகிறேன்' என்று விடைபெற்றார்.

அவர் அந்த சிறுமியிடம் 'வீட்டுக்கு போய் உன் அம்மாவிடம் டால்ஸ்டாயுடன் பந்து விளையாடினேன் என்று சொல். உன் அம்மா மகிழ்ச்சி அடைவாள்!' என்றார். அந்த சிறுமியும் 'சரி அங்கிள். அதுபோலவே நீங்களும் வீட்டுக்கு போனதும் உங்கள் அம்மாவிடம் மேரியுடன் பந்து விளையாடினேன் என்று சொல்லுங்கள்!' என்றாள்.

அப்போதுதான் அவருக்கு புரிந்தது. அவர் எவ்வளவு பெரிய எழுத்தாளராக வேண்டுமானலும் இருக்கலாம், அந்த சிறுமிக்கு அது தெரியாது அல்லது அது ஒரு பொருட்டல்ல. சிறுமியின் கண்ணோட்டத்தில் டால்ஸ்டாய்க்கு இருக்கும் அதே முக்ககியத்துவம் சிறுமிக்கும் உண்டு. தனக்கு அந்தச் சிறுமி ஒரு குரு என்றும் அவளால் தன் ஆணவம் அழிந்தது என்றும் எழுதுகிறார் டால்ஸ்டாய்.

(குறிப்பு: இல.கணேசனைத் தலைவராகக் கொண்டு இயக்கும் பொற்றாமரை இலக்கியக் கூடத்தில் சொற்பொழிவாளர் கி. சிவகுமார் சொன்னது)


Tuesday, October 18, 2011

மீன் கதை உணர்த்தும் நீதி


ஆய்வாளர்கள்.ஒரு தொட்டியில் மீனை வைத்து மறு தொட்டியில் அதற்கான உணவினை வைத்து நடுவில் கண்ணாடி சுவரினை வைத்து விட்டனர். அந்த மீன் உணவினை எடுப்பதற்காக நீந்தி சென்று நடுவில் இருந்த கண்ணாடியில் அடி பட்டு விட்டது. ஒவ்வொரு முறையும் அது முயன்று முயன்று பார்த்துதது. ஆனால் உணவினை எடுக்க முடியவில்லை. ஏமாற்றம் தான் மிஞ்சியது. சில நாட்களுக்கு பிறகு ஆய்வாளர்கள் அந்த கண்ணாடியை எடுத்து விட்டனர். அப்போது மீன் அந்த உணவினை எடுக்க முயற்சி செய்ய வில்லை. காரணம் மீண்டும் அடி பட்டு விடுவோமோ என்ற பயம். ஆனால் கொஞ்சம் முயற்சித்து இருந்தாலும் உணவு மீன்க்கு கிடைத்து இருக்கும்.


கதை உணர்த்து நீதி:
ஒரு செயலை தொடங்கும் போது தோல்விகள் தொடர்ந்து வருது.அதனால் சுவண்டு விடக்கூடாது.தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நமக்கே...



கதையை படிச்சிடிங்க தானா... மீன் சாப்பிட்டு போங்க.....
மீன் எப்படி இருக்குன்னு கமெண்ட் பண்ணிருங்க....