Wednesday, November 23, 2011

அவளின் வாசனை





அலுவலகம முடித்து 
வீடு திரும்பும்
பேருந்து பயணங்களில் 
அவளையும் பார்க்கலாம்...
டியோடரண்ட் துணையுடன்
உயிர் வாழும்
உயினங்களில்
அவளும் ஒருத்தி...
அவள் இறங்கும் இடத்திற்கு
முன்புள்ள பேருந்து நிறுத்தஙங்களில்
இறங்கி போகும் 
பெரும்பான்மையான ஆண்களிடம்
கொஞ்சம் கொஞ்சம் தென்படும
அவளின் வாசனை......



Monday, November 21, 2011

நீண்ட நாள் ஆசை...



கவிதை எழுத வேண்டும்
என்று
நீண்ட நாள் 
ஆசை....
இயற்கை அழகை
பார்த்து
ரசித்து
எழுத நினைத்த நான்
சில காகிதங்களையும்
பேனாவையும்
எடுத்து கொண்டு 
பூங்கா சென்றேன்....
ஆனால் 
அங்கோ
பசுமையான செடிகளுக்கு
பதில்
நாள்களை எண்ணி 
கொண்டுயிருக்கும்
பழுப்பு செடிகளும்
நாளை வியாதியினை 
எளிமையாக
வரவைக்கும்
கொசுக்களும்
நள்ளிரவு
குடிமகன்கள்
விட்டு சென்ற 
மதுபாட்டில்களுமே 
இருந்தன...
கவிதை
ஆசை இன்னும் 
தீரவில்லை...

Monday, November 14, 2011

காகங்களின் ஆசை




ஒரு காட்டின் ஆற்றங்கரையின் அருகே அடர்ந்த ஆலமரம் ஒன்று இருந்தது. ஆலமரத்தில் ஏராளமான காகங்கள் கூடு கட்டி வசித்து வந்தன. ஒருநாள் அந்த மரத்தின் பக்கமாக மயில் ஒன்று பறந்து வந்தது. அந்த மயில் ஆலமரக் கிளையில் அமர்ந்ததும், காகங்கள் எல்லாம் மயிலை அதிசயமாகப் பார்த்தன. மயில் தோகையுடன் அழகாக இருக்கவே, தங்களுக்கும் தோகை எதுவும் இல்லையே என்று காகங்கள் வருத்தமடைந்தன. உடனே அந்த மயிலைச் சூழ்ந்து கொண்டன. மயிலே உன்னிடம் அழகான தோகை இருக்கிறதே! உன்னைப் போன்று எங்களுக்கு தோகை வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். எங்களுக்கும் தோகை கிடைக்க வேண்டுமென்றால் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று காகங்கள் கேட்டன. மயிலோ அந்தக் காகங்களை எல்லாம் முட்டாள்களாக்க வேண்டும் என்று மனதுள் நினைத்தது

காகங்களே நீங்கள் என்னிடம் விரும்பிக் கேட்கிற காரணத்தால், நான் இந்தக் கதையினை உங்களிடம் தெரியப்படுத்துகிறேன். காகங்களே! நான் மலை உச்சியில் உள்ள வேப்பமரத்தில் வசித்து வந்தேன். அப்போது எனக்கு இந்த தோகையில்லை. அப்போது மலையிடுக்கில் என்னைப் போன்ற மயில் ஒன்று வசித்து வந்தது. ஆனால், அதற்கு தோகையிருந்தது. நான் உடனே அந்த மயிலிடம் சென்று, நண்பனே! உனக்கு மட்டும் அழகிய தோகையிருக்கிறதே, எனக்கு அந்தத் தோகையில்லையே. அது எதனால்? என்று கேட்டேன். உடனே அந்த மயில் நீ எனக்கு மூன்று வேளையும் நேரம் தவறாமல் இரையினைச் சேகரித்துக் கொண்டு வந்தால் உனக்கு தோகை வளர்ந்து விடும் என்றது. உடனே நானும் தினமும் என் பசியை மறந்து அந்த மயிலுக்கு மூன்று வேளையும் இரை தேடிக் கொடுத்தேன். இப்படியே ஒரு மாதம் முடிவடைந்தன. அதன் பிறகு ஒருநாள் இரவு நேரம் நான் நல்ல தூக்கத்தில் இருந்தேன். அதிகாலை நேரத்தில் நான் கண்விழித்துப் பார்த்த போது எனக்குப் பெரிய தோகை வளர்ந்திருப்பதைக் கண்டேன். உடனே மகிழ்ச்சியில் ஆடிப், பாடினேன் என்றது மயில். உடனே ஒரு காகம், மயிலே! நாங்களும் உனக்கு மூன்று வேளையும் இரை தேடித் தந்தால், ஒரு மாதத்திற்குப் பின்னர் எங்களுக்கும் தோகை வளர்ந்து விடுமல்லவா? என்று கேட்டது. அதிலென்ன சந்தேகம், உடனேயே தோகை வளர்ந்து விடும்! என்றது மயில். அதனைக் கேட்ட காகங்கள் எல்லாம் மகிழ்ச்சியடைந்தன. மயிலின் பேச்சைக் கேட்ட காகங்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு இரை தேடச் சென்றன. இப்படியே தொடர்ந்து ஒரு மாத காலமாக காகங்கள் எல்லாம் தங்களின் பசியையே மறந்து, மயிலுக்கு மூன்று வேளையும் உணவுத் தேடிக் கொடுப்பதிலேயே மிகவும் கவனமாக இருந்தன. இதன் காரணமாக சில காகங்கள் சோர்வடைந்தன. இன்னும் சில காகங்கள் மயங்கி விழுந்தன.

ஆனால் மயிலோ அதனைப் பற்றிக் கவலைப்படவில்லை. நாம் இந்தக் காகங்களை ஏமாற்றி ஒரு மாத காலம் உட்கார்ந்த இடத்திலேயே அமர்ந்தபடி மூன்று வேளையும் உணவைத் தேடிக் கொண்டோம். இந்த முட்டாள் காகங்கள் நம் பேச்சை நம்பி ஏமாந்துவிட்டன! என்று மனதுக்குள் நினைத்தபடி மகிழ்ச்சியுடன் இருந்தது. அப்போது அந்தப் பக்கமாக வேடன் ஒருவன் வந்தான். அவன் மரத்தில் நின்று கொண்டிருக்கும் மயிலைப் பார்த்தான். நெடு நாட்களாகவே மயில் தோகை கிடைக்க வேண்டி முயற்சித்து வந்தான் அந்த வேடன். இப்போது தோகைகளுடன் கூடிய மயிலைப் பார்த்ததும் அதன் மீது அம்பினை எய்தான். அம்பு பட்ட மயிலும் பொத்தென்று தரையில் விழுந்தது. தரையில் விழுந்த மயிலை வேடன் தூக்கிச் சென்றான். உடனே மயில், காகங்களுக்கு நாம் செய்த துரோகத்திற்குத் தான், கடவுளால் நமக்கு இப்படி ஒரு தண்டனை கிடைத்திருக்கிறது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டது.

நீதி: ஏமாற்ற நினைப்பவர்களுக்கு தண்டனை நிச்சயம்

குறிப்பு: இது குழந்தைகள் எழுதிய காம்போய் கதைகள் என்ற நூல் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

Thursday, November 10, 2011

இதயம் இல்லை.....


படிச்சி முடிச்சிட்டு திட்டமா இருந்த சரி......

புத்தகம்
மேசை
கணிப்பொறி
சுட்டி
விசைப்பலகை
குறுந்தகடு
கோப்பையில்
உள்ள
தண்ணீர்
இருக்கை
இவை
அனைத்தும் 
இருந்தது 
நான் இருந்த 
அறையில்....

ஏதோ பக்கத்துல இருக்குற பேரை எல்லாம் ஒன்னுக்கு கீழ ஒன்னு எழுதி வைச்சிட்டேன்.........எப்புடி.........


இதயம் இல்லை.......

உன் நினைவுகளை
என்
இதயத்தில்
பத்திரப்படுத்தி 
வைக்க வேண்டிய 
ஆவல் எனக்குதான்...
இருந்தும்
முடியவில்லை...
என் இதயம் 
உன்னிடம் 
இருப்பதினால்.....




பூக்கள்.

நீ 
சொல்லும் 
ஒவ்வொரு வார்த்தைகளும் 
பூக்களாக உதிர்கின்றது.....
பூக்களுக்கு போட்டி 
யார் உன் 
பாதைத்தை 
தொடுவது என்று.....



Wednesday, November 2, 2011

இது ஒரு மொக்க கதை.....


ஒரு அழகான கிராமம்.அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்.அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை(மத்தது எல்லாம் சப்ப பிகராம்.).அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள்.

இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர். உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர்.அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான். உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள்.
அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது,இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.

அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை

அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது.அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள்.இருந்தும் கறை போகவில்லை.

அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள்.அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.உடனே இவள் பயத்தினால் அலறினாள்.

அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப் எக்ஸல் போடு கறை போயிடும்" என்றது. 




நீதி: கரை நல்லது..ஏனா கரை பட்டதால தான் தேவதை நேர்ல வந்தது..நோ..நோ...அழக்கூடாது.....

குறிப்பு:  சுட்ட கதையை கொஞ்சம் மாத்திருக்கு.